Thursday, July 2, 2015

ஆலயமாகும் / அன்பு உள்ளமே.....!


ஆலயம் செல்லுவது மன நிம்மதிக்காக.....
ஆலயம் என்பது எங்குமில்லை.....
நம்முள் இருப்பதே அந்த ஆலயம்……!
இன்பமோ துன்பமோ
அனைத்து நிலையிலும்.....!
ஆக்கமும்.....ஊக்கமும்.....
நம்முள் உண்டு.....!
ஐம்பூதங்களும் நம்முள்ளேயே உண்டு.....!
இயல், இசை, நாடகத்தின்
கட்டுக்குள் நம் உணர்வுகள்....
அடங்கிடும்.....!
நம் எண்ணங்களுக்கு அபரிமித…..
ஆற்றல் உண்டு.....!
அந்த ஆற்றல்.....
நல்லனவே எனில்...
விளைவும் நல்லதே.....!
மாற்றமானதெனில்....
விளைவும் மாறுபாடு
உடையதாகவே இருக்கும்....!
என்றென்றும் நம்
உடலெனும்!
ஆலயத்தினை...
உயர்எண்ணம் எனும்
தீபமேற்றி.....
மகிழ்வென்னும்
மணத்தினை…..
நம்மைச் சூழ்ந்திட்ட உறவோடு
பகிர்ந்துகொள்ளுவோம்
என்றென்றும்.....!
நாமும் நம்மை சுற்றியும்
எப்போதும் மகிழ்ச்சியை
நம்முள் தக்கவைக்கும்பொழுது
நம்முள்ளமே ஆலயமன்றோ......!

No comments:

Post a Comment