Thursday, July 2, 2015

உண்மை நட்பும் / உயரிய நட்பும்

நட்பு மிகவும்
                      அழகானது….!
                      இதமானது….!
                      சுகமானது….!
நல்லோர் நட்பு என்றும்
                      நிலையானது….!
                      பலரால்
                      போற்றப்படுவது….!
சில நேரம் நட்பு மிகவும்
                      சிக்கலானது….!
                     ஆபத்தானது….!
                     வேதனையானது….!
அந்த ஆகாத நட்பு….!
                      பலப்பல
                      வில்லங்கங்களை
                      விளையச் செய்கிறது……!
நல்ல நட்பு எப்போதும்
                      சிந்திக்க....
                      செய்வதாகவே
                      அமைகிறது….!
சிந்தித்து செயல்படுவோம்…..!
                      நல்ல நட்பிற்கு…..
                      நாமே நல்ல.....
                      இலக்கணமாவோம்……!

ஆலயமாகும் / அன்பு உள்ளமே.....!


ஆலயம் செல்லுவது மன நிம்மதிக்காக.....
ஆலயம் என்பது எங்குமில்லை.....
நம்முள் இருப்பதே அந்த ஆலயம்……!
இன்பமோ துன்பமோ
அனைத்து நிலையிலும்.....!
ஆக்கமும்.....ஊக்கமும்.....
நம்முள் உண்டு.....!
ஐம்பூதங்களும் நம்முள்ளேயே உண்டு.....!
இயல், இசை, நாடகத்தின்
கட்டுக்குள் நம் உணர்வுகள்....
அடங்கிடும்.....!
நம் எண்ணங்களுக்கு அபரிமித…..
ஆற்றல் உண்டு.....!
அந்த ஆற்றல்.....
நல்லனவே எனில்...
விளைவும் நல்லதே.....!
மாற்றமானதெனில்....
விளைவும் மாறுபாடு
உடையதாகவே இருக்கும்....!
என்றென்றும் நம்
உடலெனும்!
ஆலயத்தினை...
உயர்எண்ணம் எனும்
தீபமேற்றி.....
மகிழ்வென்னும்
மணத்தினை…..
நம்மைச் சூழ்ந்திட்ட உறவோடு
பகிர்ந்துகொள்ளுவோம்
என்றென்றும்.....!
நாமும் நம்மை சுற்றியும்
எப்போதும் மகிழ்ச்சியை
நம்முள் தக்கவைக்கும்பொழுது
நம்முள்ளமே ஆலயமன்றோ......!

Monday, January 5, 2015

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!.....

 2015.....சாதனைகள்.....சாதிக்கலாம்...

                              வாருங்கள்.......!

Thursday, March 13, 2014

நிழலின் வெளிச்சம்

பெண்ணே.......! நீ...... யார்.............?
நிழலா..... நீ......?
நிழலாயிருப்பது...... சரியில்லை.....!
நிஜமாய்........ வெளியில்.... வந்துவிடு....!
நீயும்... உலகில்.... ஒளிர்ந்துவிடு....!
சுயமாய்..... நீயும்.... சிந்தித்திடு....!
சிக்கல்....... எதுவெனினும்....... சந்தித்திடு.....!
உனது....... அறிவின்.... ஒளியை..... உணர்ந்துவிடு....!
உன்...... சமூகச்சூழலை..... எண்ணிவிடு....!
ஊக்கம்..... கொண்டே... எழுந்துவிடு.....!
உனை........ அமிழ்த்தும்.....! சூழலை..... வீழ்த்திவிடு....!
உன்...... செயலின்......  திறனை..... உணர்த்திவிடு.....!
புதிய..... சமுதாயம்..... படைத்துவிடு.....!
புத்தொளியாய்.... எழுந்து..... நின்றுவிடு.......!
ஒளியில்லா.......  நிழலில்லை.....  பெண்ணே.........!!
நிழலாயிருப்பது........... உன் இயலாமை அன்றோ.....!
இனியும்......... நிழலாய்........ நீ........ இருக்கலாமோ.......?
நிழலின்....... வெளிச்சம்........  நீயல்லவா.....!
அதன்........ உன்னதத்தை........ உணர்ந்துவிடு......!
இவ்வுலகை........... இயக்கும்............இயக்கமும்... நீயன்றோ........!
இயக்கும்........ நீயே.... நிழலாய்........இருக்கலாமோ......?
இதை நீ.......உணராது......... போனால்.......!
நீயும்............ இருளும்............ ஒன்றன்றோ..........!
இருள் அல்ல நீ....!  
நீயே..... வெளிச்சம் ...!
"நிழலின்...... வெளிச்சம்....!"


                                  உலக மகளிர் தின வாழ்த்துகளுடன்......................